Tuesday, 24 July 2012

ஈமுக்கோழி முட்டைகள் &முட்டைகளை அடைகாத்தல் :



இனப்பெருக்கத்திற்கு பயன்படும் பெண் ஈமுகோழிகளுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து (2.7%) அளிக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட முட்டைகளை 60˚Fவெப்பநிலையில் சேமித்து வைக்கவேண்டும்.கருவுற்ற முட்டைகளை 10 நாட்களுக்கு மேல் சேகரித்து வைக்கக்கூடாது. முட்டைகளை சேகரித்து 3-4 நாட்களுக்குள் அடை வைத்து விட வேண்டும்
முட்டைகளை அடைகாத்தல் :
கருவுற்ற முட்டைகளை முட்டை அடைகாப்பானில் குஞ்சு பொரிப்பதற்காக வைக்கவேண்டும். அடைகாப்பான் முட்டை அடை வைப்பதற்கு முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு அடைகாப்பானில் உலர் வெப்பமானியில் 96-97˚F,ஈரவெப்பநிலைமானியில் 78-80˚F என்ற வெப்பநிலைக்கு பொருத்த வேண்டும். மேலும் அடைகாப்பானின் உள்ளே ஈரப்பதம் 30-40% இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக வைக்கும் தேதிமுட்டையிட்ட தேதி ஆகியவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். முட்டைகளை அடைவைத்து 48ம் நாள் வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பிவிட வேண்டும் அல்லது தானியங்கி அடைகாப்பானை பயன்படுத்தலாம். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து முட்டைகளை திருப்புவதை நிறுத்தி விடவேண்டும். 52ம் நாள் முட்டை அடைகாப்பது முடிவுறும். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து 52ம் நாள் வரை முட்டை ஒட்டினை உடைத்து குஞ்சுகள் வெளி வரத் துவங்கும். முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவந்த பின்புகுஞ்சுகள் 1-3 நாட்களுக்கு அடைகாப்பானிலேயே பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம். பொதுவாகஈமுகோழிகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 70% இருக்கும். இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஈமுகோழிகளுக்கு சரிவிகித தீவனம் அளித்தால் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம்.

No comments:

Post a Comment